Private Schools: தனியார் பள்ளிகளுக்கு கடும் எச்சரிக்கை

strict-warning-to-private-schools
தனியார் பள்ளிகளுக்கு கடும் எச்சரிக்கை

Private Schools: கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்தால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் பல மாணவர்களின் படிப்பு வீணாகி போனது. அதனால் புகார் வரும் பள்ளிகளின் மீது கல்வி அலுவலர்கள் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்

கொரோனா வைரஸ் பரவிய நாளிலிருந்து சில மாதங்களுக்குப் பிறகு பள்ளி மற்றும் கல்லூரிகள் இரண்டு வருடங்களாக மூடப்பட்ட. பள்ளிகள் செயல்படாத நாட்களில் மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடந்தன.

இருப்பினும் மாணவர்களிடமிருந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் கல்விக் கட்டணத்தை செலுத்துமாறு வலியுறுத்தினர் கரோனா வைரஸ் வந்த சூழலிலும் மக்கள் பெரும் கஷ்டத்திலும் அனைத்து கல்விக் கட்டணத்தையும் செலுத்தினர்.

கல்விக்கட்டணம் செலுத்த முடியாத பெற்றோர்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்பி வைத்தனர் இதனால் பல மாணவர்களின் படிப்பு வீணாகி போனது.

தற்போது பள்ளிகள் திறந்த நிலையில் மாணவர்களை கல்வி கட்டணம் செலுத்த வேண்டும் செலுத்தாதவர்கள் வகுப்புக்குள் வரக்கூடாது என கூறி மாணவர்களை வெளியில் அனுப்பி வைத்துள்ளனர். அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு மெட்ரிக் இயக்குனர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டார் பள்ளி மாணவர்களை கல்வி கட்டணம் கேட்டு வகுப்பறைக்கு வெளியில் நிற்க வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென கூறினார்.

Private Schools in Tamil Nadu

இதையும் படிங்க: Mayor: தஞ்சை, கும்பகோணத்தில் மாநகராட்சி மேயர்கள் பதவி ஏற்பு