நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்- அருந்ததி ராய்

பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இருந்து எனது புத்தகம் நீக்கப்பட்டிருப்பதற்காக போராடுவது எனது வேலை அல்ல என சமூக செயல்பாட்டாளரும், எழுத்தாளருமான அருந்ததி ராய் கருத்து தெரிவித்துள்ளார்.

உலகப் புகழ் பெற்ற “புக்கர் பரிசு வென்ற” இந்திய எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய “தோழர்களுடன் ஒரு பயணம் (Walking with the Comrades)” என்ற புத்தகம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாட திட்டத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் முதுநிலை ஆங்கிலம் படிப்பிற்கான மூன்றாவது பருவத்தில் பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆர்.எஸ்.எஸின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி இந்த புத்தகம் நக்சல்களை உயர்வாக சித்தரிப்பதாகவும், தேச விரோத கருத்துக்களை பிரதிபலிப்பதாகவும் கூறி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை சந்தித்து இந்த புத்தகத்தை பாடத்திட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்தது. இதனையடுத்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் பாடத்திட்டத்தை நீக்கியதாக அறியமுடிகிறது.

இது எனக்கு ​விந்தையாக மட்டுமே இருக்கிறது. நான் ஒருபோதும் சோகமாக உணரவில்லை. மகிழ்ச்சியாக இருக்கிறேன் என அருந்ததி ராய் தெரிவித்துள்ளார்.