கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு பல நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின் !

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.இதில் திமுக அரசு வெற்றி பெற்று ஸ்டாலின் ஆட்சி அமைத்தார்.முதல்வராக பொறுப்பேற்ற பிறகு மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.

மேலும் தற்போது தமிழகத்தை ஆட்டி படைக்கும் கரோனா தொற்று தடுக்க தீவிரமாக செயல்பட்டுவருகிறார்.இதில் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

இன்று மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள்.கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு பல திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

கரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.அதன்படி 2.9 கோடி குடும்பங்களுக்கு முதல் தவணை ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில் அதன் 2ஆவது தவணை ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்.

மேலும் கரோனா காலத்தில் மக்களில் பொது வாழ்க்கை மிகவும் சிக்கலாகியுள்ளது. 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் திட்டமும் இன்று தொடங்கி வைக்கப்படுகிறது.

மற்றும் மேலும் கரோனா காலத்தில் மக்களில் பொது வாழ்க்கை மிகவும் சிக்கலாகியுள்ளது. 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் திட்டமும் இன்று தொடங்கி வைக்கப்படுகிறது.

இந்த கரோனா காலத்தில் இறந்த பத்திரிகையாளர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம், டாக்டர்கள், மருத்துவ பணியாளர், போலீசார் மற்றும் நீதிபதிகள் ஆகியோரின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் ஆகிய உதவி வழங்கும் திட்டங்களை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.