கேரளாவை வாட்டும் ஜிகா வைரஸ் !

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவை பெரிதும் தாக்கியுள்ளது.தொற்று அதிகம் பரவும் மாநிலங்களில் கேரளாவும் ஒன்று.

கொரோனா தொற்று ஒரு பக்கம் இருக்கும் நிலையில்,தற்போது கேரளாவில் ஜிகா வைரஸ் தொற்றும் பரவி வருவதால் இவைகளை கட்டுப்படுத்த முடியாமல் கேரள அரசு தவித்து வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு கர்ப்பிணி ஒருவருக்கு ஜிகா வைரஸ் தொற்று இருப்பது சில நாட்களுக்கு முன்னர் கண்டறியப்பட்டது. இந்த வைரஸால் இதுவரை 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

கொரோனா தொற்று மற்றும் ஜிகா வைரஸ் இவைகளை கட்டுப்படுத்த மத்திய அரசு நிபுணர்கள் குழு விரைவில் கேரளவுக்கு வரவுள்ளது.

கொசு மூலம் இந்த வைரஸ் பரவுகிறது. இதற்கு இதுவரை தடுப்பூசியோ நேரடியான மருந்தோ இல்லை என்கின்றனர். எனினும், உயிரிழப்பு என்பது மிக அரிதாகவே இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்த கொசு பகலில் தான் கடிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். வீடு மற்றும் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது,பகலில் கொசுக்கள் கடிக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர்.