Special trains for pongal festival : பண்டிகை கால சிறப்பு ரயில்கள் !

Train accident
ஆந்திரா ஸ்ரீகாகுளத்தில் ரயில் விபத்து

Special trains for pongal festival : தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி ஜனவரி 13ம் தேதி முதல் ரயில்கள் இயக்கப்படும்.

தமிழகத்தில், கொரோனாவின் இரண்டாவது அலை குறையத் தொடங்கியபோது, ​​ரத்து செய்யப்பட்ட ரயில்கள் படிப்படியாக மீண்டும் இயக்கப்பட்டன. தற்போது முன்பதிவு இல்லாத ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

வரும் ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனையடுத்து வெளியூர்களில் உள்ள மக்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு வருவது வழக்கம். இதனால் தென் மாவட்ட ரயில்களில்பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன.

எனவே பொங்கல் பண்டிகையையொட்டி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களுக்கு தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.Special trains for pongal festival

இதையடுத்து சபரிமலையில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் – காட்பாடி – சேலம் – கோவை வழியாக கொல்லத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

இதையும் படிங்க : முடி வளர சின்ன சின்ன ரகசியம்..!