tn news : 110 கோடி மதிப்புடைய சொத்துக்கள் முடக்கம் !

tn news : 110 கோடி மதிப்புடைய சொத்துக்கள் முடக்கம் !
tn news : 110 கோடி மதிப்புடைய சொத்துக்கள் முடக்கம் !

tn news : முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடர்பான வழக்கில் ரூ.110 கோடி நிரந்தர வைப்புதொகையை முடக்க லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி. வேலுமணி. அமைச்சராக இருந்தபோது அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் அரசு டெண்டர்களை தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு வழங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

எஸ்.பி வேலுமணியின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் உட்பட 60 இடங்களில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு நடத்தியது.

லேப்டாப்கள், பல்வேறு ஹார்ட் டிஸ்க்குகள், 2 கோடி மதிப்பிலான வைப்புத்தொகை பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த ரெய்டுக்கு பின் எஸ்பி வேலுமணி உட்பட 17 பேர் மீது வழக்கு பதியப்பட்டது.

எஸ்.பி வேலுமணிக்கு நெருக்கமான கே. சந்திர பிரகாஷ் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : strong and healthy hair : அடர்த்தியாக முடி வளர்க்க வேண்டுமா !