மாநாடு 3ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்..!

மாநாடு திரைப்படம் முதல் நாளில் 8 கோடி வரை வசூல் ஈட்டியதாகவும் இரண்டாம் நாளில் 9 கோடி வசூல் பெற்றதாகவும் தகவல்கள் வெளியான நிலையில், மொத்தம் இரண்டு நாட்களுக்கும் சேர்த்தே 14 கோடி ரூபாய் வசூல் வந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியே தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று அறிவித்து தெளிவு படுத்தி விட்டார்.

மூன்றாம் நாளான நேற்றும் மழை தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் கொட்டித் தீர்த்தது. முதல் இரு நாளில் 14 கோடி ரூபாய் வசூல் வந்த நிலையில், மூன்றாம் நாள் வசூல் 4 முதல் 6 கோடி வரை வந்திருக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மொத்தம் 20 கோடி ரூபாய் வசூலை இதுவரை மாநாடு திரைப்படம் வசூல் செய்திருக்க வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது.