இன்று சர்வதேச மொழிபெயர்ப்பு தினம்

உலகில் சுமார் 6500 மொழிகள் பேசப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது. அனைவராலும் அனைத்து மொழிகளிலும் தொடர்புகொள்ள முடியாது. அதாவது அனைவருக்கும் அனைத்து மொழிகளும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்நிலையில் தான் மொழிபெயர்ப்பு அவசியம்.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30 ஆம் தேதி உலக மொழி பெயர்ப்பு தினம் கொண்டாடப்படுகிறது.

உலக அமைதி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக சர்வதேச ராஜதந்திர பணிகளில் மொழிபெயர்ப்பு வல்லுனராக பணியாற்றும் மொழிபெயர்ப்பாளர்களை போற்றுவவதற்காகவே இந்த தினம் அங்கீகரிக்கப்படுகிறது.

மொழிபெயர்ப்பாளரின் தலைவராக கருதப்படும் பைபிள் மொழிபெயர்ப்பாளர் ஜெரோல் என்பவரின் நினைவாக செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இன்றைய ராசி பலன்