தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளி அண்ட் கல்லூரி வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெற்றுவருகிறது.மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு இவ்வாறு செயல்படுகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் நடப்பு செமஸ்டர் தேர்வுக்கான கட்டணம் செலுத்தும் அவகாசம் கொரோனா பரவல் காரணமாக ஜூன் 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கல்வியாண்டிற்கான செமஸ்டர் தேர்வு ஜூன் மாத இறுதியில் ஆன்லைன் மூலமாக நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தகவலை பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு தொழில்நுட்பக் கல்ழி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.



