செல்பி மோகத்தால் ரயில் மோதி மூன்று இளைஞர்கள் உயிரிழப்பு

ரயில் மோதி மூன்று இளைஞர்கள் உயிரிழப்பு
ரயில் மோதி மூன்று இளைஞர்கள் உயிரிழப்பு

Selfie Addiction: செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள் கோவில் அருகே உள்ள செட்டிபுண்ணியம் பாரதியார் தெருவில் வசிக்கும் அசோக்(24), மோகன்(17) பிரகாஷ்(17) மூன்று பேரும் நண்பர்கள்.

சுகுமார் என்பவருடைய மகன் அசோக்(24), குமார் என்பவருடைய மகன் மோகன்(17) ராமு என்பவருடைய மகன் பிரகாஷ்(17) இந்த மூன்று நண்பர்களும் ஒன்றாக இணைந்து வீடியோக்களை (Video) எடுத்து, அதை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்வது வழக்கம்.

நண்பர்கள் மூவரும் வழக்கம்போலவே நேற்று மாலை தாம்பரம் செங்கல்பட்டு இடையே மூன்றாவதாக அமைக்கப்பட்டுள்ள ரயில் இருப்புப் பாதையில் அமர்ந்து இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதற்காக வீடியோக்களை எடுத்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அந்த சமயத்தில் சென்னை தாம்பரத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி செல்லக்கூடிய விரைவு ரயில் வந்து கொண்டிருந்தது. ரயில்வே இருப்புப் பாதையில் நின்று செல்போனில் வீடியோக்களை பதிவு செய்து கொண்டிருந்த மூவரும் ரயில் வருவதை கவனிக்காமல் நின்று கொண்டிருந்தனர்.

இதையும் படிங்க: TN Assembly: தமிழக சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவு துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம்..!

இதனால், எதிர்பாராத விதமாக ரயில் மோதியது. இந்த விபத்தில் அசோக், மோகன், பிரகாஷ், ஆகிய மூன்று இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்

தகவல் அறிந்து வந்த ரயில்வே காவல் துறையினர் மூன்று இளைஞர்களுடைய சடலங்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

செல்பி மோகத்தால் ஒரே தெருவைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் ரயிலில் மோதிய விபத்தில் உயிரிழந்திருப்பது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: Actor Vijay Fans: கடலூரில் விஜய் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி