அஞ்சலகக் கணக்கர் தேர்வை தமிழில் வேண்டும் – நாம் தமிழர் கட்சி !

அஞ்சலகக் கணக்கர் தேர்வை தமிழில் வேண்டும் – நாம் தமிழர் கட்சி !தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் மத்திய தேர்வாணையத்தால் நடத்தப்படும் அஞ்சல் துறைத்தேர்வுகள் தமிழ் உள்பட 15 மாநில மொழிகளில் நடத்தப்பட்டு வந்தது. தற்போது அஞ்சலகக் கணக்கர் பணியிடங்களுக்கான தேர்வுகள் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஒரு கோடிக்கும் மேற்பட்ட தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். இப்போக்கு இனியும் தொடருமானால் மிகப்பெரும் எதிர்விளைவுகளை மத்திய அரசு எதிர்கொள்ள நேரிடும்” எனத் தெரிவித்துள்ளார்.