Karnataka Hijab Row: 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

karnataka hijab issue
11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Karnataka Hijab Row: கர்நாடகா மாநிலத்தில் ஹிஜாப் பிரச்சனை காரணமாக கடந்த வாரத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளை மூட அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனை தொடர்ந்து நாளை 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் பி.யூ கல்லூரி உட்பட்ட பல்வேறு கல்லூரிகளில் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை மீறி 6 முஸ்லீம் மாணவிகள் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வந்தனர். இவர்களுக்கு வகுப்பறைக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் இந்த நடைமுறைக்கு எதிராக முஸ்லீம் மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் கல்லூரி நிர்வாகம் தங்களது ஆடை விவகாரத்தில் தலையிடுவதாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை தொடர்ந்து முஸ்லீம் மற்றும் இந்து மாணவர்களுக்கு இடையே பிரச்சனைகளும் ஏற்பட்டது.

இந்த பிரச்சனை உடுப்பி, மங்களூர், சிக்மங்களூர், சிவமொக்கா உள்ளிட்ட மாவட்டங்களிலும் பரவ தொடங்கியது. அதனால் கலவரத்தை கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அத்துடன் அங்குள்ள பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது ஹிஜாப், காவி உடை என எதையும் மாணவர்கள் கல்வி நிலையங்களுக்கு அணிந்து வர கூடாது என்று உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து மூடப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளை திறப்பது குறித்து முதல்வர் ஆலோசனைகளை மேற்கொண்டார்.

அதன்படி இன்று 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்தார். மேலும் இந்த பள்ளிகளை சுற்றியுள்ள பகுதிகளில் கலவரங்கள் ஏற்படாமல் இருக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இதர வகுப்புகளை திறப்பது குறித்து முதல்வர் ஆலோசனைகள் மேற்கொண்டார். இந்த ஆலோசனையின் முடிவில் நாளை முதல் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அதுவரை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும் முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: வினாத்தாள் கசிந்த விவகாரம்- திருவண்ணாமலை மாவட்ட கல்வி அதிகாரி சஸ்பெண்டு