மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெற்று பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிக்கப்படும்

தமிழகத்தில் மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெற்று பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று ஊரடங்கு போடப்பட்டதிலிருந்து, பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தாலும், எதிர்காலம் என்னவாகும் என்று பெற்றோர்கள் அச்சப்பட்டு வருகின்றனர்.

கல்வியலாளர்கள், ஆன்லைன் வகுப்புகளை மாணவர்கள் கவனிக்கும்படி, தரமான இணையதள வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று கூறி வருகின்றனர். இந்நிலையில் அமைச்சர், மருத்துவர்களின் ஆலோசனை பெற்று பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.