TN School Holidays: மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு

march-19-is-all-school-holiday
பள்ளிகள் விடுமுறை

TN School Holidays: தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் 10ம் வகுப்பு 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று பிரச்சனையால், தேர்வு நடத்தாமல் அனைவருக்கும் ஆல் பாஸ் வழங்கப்பட்டது. இந்தாண்டு செப்டம்பர் முதல் அவ்வப்போது பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடியாக பாடங்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை ஏப்ரல், மே மாதத்திற்குள் நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

அதன்படி,தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 25ம் தேதி தொடங்குகிறது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5ம் தேதி முதல் மே 28ம் தேதி வரை நடைபெறும். அதேபோல், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6ல் தொடங்கி 30ம் தேதியும், 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 9ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடைபெறுகிறது. ஜூன் 23ம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும், ஜூன் 17 வெளியிடப்படும். பொதுத்தேர்வுக்கான தேதி அட்டவணை http://tnschools.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கான கால அட்டவணை தயாரிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டுஅதற்கு முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் வழங்கியதாக கூறப்பட்டது. இதையடுத்து, பொதுத்தேர்வுக்கான அட்டவணை அறிவிப்பு இரண்டு முறை தள்ளிவைக்கப்பட்ட நிலையில் தற்போது பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எப்போதில் இருந்து எப்போது வரை கோடை விடுமுறை என்று தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 1 முதல் 5ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு மே 13 வரை வகுப்புகள் நடைபெறுகின்றன. அதற்குப் பிறகு கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. மீண்டும் ஜூன் 13ஆம் தேதி வகுப்புகள் தொடங்குகின்றன.அதேபோல 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 30 நாட்களும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 23 நாட்களும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்புக்கு 12 நாட்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட உள்ளது.

Summer vacation announcement for students

இதையும் படிங்க: NEET: உக்ரைனில் இறந்த கர்நாடக மாணவரின் மரணத்துக்கு நீட் தான் காரணம் – குமாரசாமி