Urban local body election: சர்க்கார் பட பாணியில் ஓட்டு போட்ட வாலிபர்

up-election-2022-voting-live-updates-up-assembly-election-phase-7-vote
வாக்குப்பதிவு தொடங்கியது

Urban local body election: தேனி மாவட்டம் பெரியகுளம் தெற்கு புதுத்தெருவை சேர்ந்தவர் செல்லபாண்டி (வயது32). கூலித்தொழிலாளி. இவர் இன்று மதியம் அங்குள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்ய வந்தபோது வேறு நபர் ஓட்டு போட்டு சென்றதால் அதிர்ச்சி அடைந்தார்.

தேர்தல் அலுவலர்களுடன் வாக்குவாதம் செய்ததால் சர்க்கார் பட பாணியில் மாற்று படிவம் வழங்கப்பட்டு அதில் அவரது முழு விபரங்களும் நிரப்பி வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார்-.

இதேபோல பெரியகுளத்தை சேர்ந்த ஆரூண் வெளிநாட்டில் வசித்து வருகிறார். இவரது ஓட்டை அதே தெருவை சேர்ந்த பிலால் (32) என்பவர் பதிவு செய்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதையும் படிங்க: hair oil for strong hair growth : அடர்த்தியாக முடி வளர்க்க ஆசையா !