ஃபேஸ்புக் இந்தியா நிறுவன கொள்கை பிரிவுத் தலைவர் ராஜினாமா

பாஜக மற்றும் மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்பட்டதாக ஃபேஸ்புக் இந்தியா நிறுவனத்தின் கொள்கை பிரிவுத் தலைவர் சங்கீதா மீது குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தெலுங்கானா பாஜக எம்எல்ஏ ஒருவர் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதனை நீக்க முயன்றபோது கொள்கை பிரிவு தலைவர் அங்கீதா தடுத்ததாக அமெரிக்க செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டு பரபரப்பை கிளப்பியது. இந்திய கிளை மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படுவதாக அது தனது செய்தியில் குறிப்பிட்டது.

இந்த நிலையில் அங்கீதா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மக்கள் பணியில் ஆர்வம் இருப்பதாகவும் கூறியுள்ளார். அவர் விரைவில் பாஜகவில் ஐக்கியமாகலாம் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.