சாம்சங் கேலக்ஸி ஏ32 விற்பனை தொடங்கியது

90 Hz டிஸ்ப்ளே மற்றும் குவாட் ரியர் காமிராவுடன் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ32 ஸ்மார்ட்போனை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. ஸோமி மி 10ஐ, ரியல்மீ எக்ஸ்7 மற்றும் மோட்டோ ஜி 5 ஜி ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக இது சந்தையில் விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி5, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், பிராக்ஸிமிட்டி சென்சார், இன் டிஸ்ப்ளே விரல்ரேகை உணரி உள்ளிட்ட வசதிகளுடன் ரூ.21,999/- விலைக்குக் கிடைக்கிறது.

எச்டிஎஃப்சி வங்கி கிரடிட் கார்டு, டெபிட் கார்டு ஆகியவற்றில் தள்ளுபடி ரூ.2,000/- போக சாம்சங் கேலக்ஸி ஏ32 ஸ்மார்ட்போனை ரூ.19,999/- என்ற விலைக்கு சாம்சங்.காம் மற்றும் முன்னணி மின்னணு விற்பனை தளங்கள், அங்காடிகளில் வாங்கலாம்.