சல்மான்கானின் புதிய படம் வெளியாகும் தேதி அறிவிப்பு!

சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராதே’ திரைப்படம் அடுத்தாண்டு ஈத் பெருநாளில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், மே 22ஆம் தேதி ரம்ஜான் வெளியீடாக வர இருந்தது. அப்போது கரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் இதன் வெளியிட்டு தேதி தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில் ‘ராதே’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின.