Salman Khan gets bitten by snake : பாலிவுட் நடிகர் சல்மான் கானை பாம்பு கடித்தது !

Salman Khan gets bitten by snake : பாலிவுட் நடிகர் சல்மான் கானை பாம்பு கடித்தது
பாலிவுட் நடிகர் சல்மான் கானை பாம்பு கடித்தது

Salman Khan gets bitten by snake : பாலிவுட் துறையில் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் சல்மான் கான்.நடிகர் சல்மான் கானை பன்வெல் அருகே உள்ள தனது பண்ணை வீட்டில் விஷமற்ற பாம்பு கடித்துள்ளது. நடிகர் வரும் திங்கள்கிழமை தனது 56வது பிறந்தநாளை கொண்டாட பண்ணை வீட்டில் இருந்தார்.

அப்போது அவர் தனது பன்வெல் பண்ணை வீட்டில் இருந்துள்ளார். பாம்பு கடித்ததை அடுத்து, சல்மான் கான் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.Salman Khan gets bitten by snake

அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.சனிக்கிழமை இரவு பாம்பு அவரது கையைக் கடித்தது, அதைத் தொடர்ந்து அவர் நவி மும்பையில் உள்ள கமோத்தேயில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டும், சல்மான் தனது பிறந்தநாளை தனது குடும்பத்துடன் பன்வெல்லில் உள்ள பண்ணை வீட்டில் கொண்டாடினார்.தற்போது அவர் தனது பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அவரது உடல்நிலை நன்றாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : 17th anniversary of tsunami : சுனாமியின் 17ஆம் ஆண்டு நினைவு தினம் !