Russia-Ukraine Crisis: உக்ரைனில் 280 கல்வி நிலையங்கள் சேதம்

russian-ukraine-crisis-forces-had-destroyed-or-damaged-280-educational--institute
கல்வி நிலையங்கள் சேதம்

Russia-Ukraine Crisis: உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் 16-வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இதில், இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர்.

போரை முன்னிட்டு பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து பாதுகாப்பு தேடி வெளியேறி வருகின்றனர். உக்ரைனிலிருந்து இதுவரை 20 லட்சத்திற்கும் அதிகமானோர் அகதிகளாக வெளியேறி உள்ளதாக ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

ரஷிய படைகள் உக்ரைனின் முக்கிய நகரங்களில் ஏவுகணை, மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் ரஷியாவிற்கு உக்ரைனும் ஈடுகொடுத்து வருகிறது. உக்ரைன்-ரஷியா போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 2,800-க்கு மேற்பட்ட உக்ரைன் ராணுவ தளவாடங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக ரஷியா ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ரஷியா இதுவரை உக்ரைனில் உள்ள சுமார் 280 கல்வி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியுள்ளதாகவும் பல கல்வி நிலையங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாகவும் உக்ரைனின் கல்வி மற்றும் அறிவியல் துறை மந்திரி செர்கி ஸ்கார்லெட் தெரிவித்துள்ளார்.

Russian Forces Had Destroyed or Damaged 280 Educational Institutions Through Bombing

இதையும் படிங்க: UP Election Result 2022: உ.பி.யில் 255 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடித்தது பா.ஜ.க.