Russia-ukraine war: உக்ரைனுக்கு மேலும் 800 மில்லியன் டாலர்கள் அமெரிக்கா உதவி

அமெரிக்கா உதவி
உக்ரைனுக்கு மேலும் 800 மில்லியன் டாலர்கள் அமெரிக்கா உதவி

Russia-ukraine war ரஷியா – உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில் மறுபுறம் சமாதான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, மரியுபோல் நகரில் உள்ள இரும்பு தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்தாமல் அந்நகரைக் கைப்பற்ற வேண்டும் என ராணுவத்தினருக்கு அதிபர் புதின் ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தார்.

உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரை ரஷியா ராணுவம் கைப்பற்றியது. ரஷிய படைகள் கைப்பற்றியதன் மூலம் மரியுபோல் நகருக்கு சுதந்திரம் கிடைத்து விட்டது என ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைன் அரசுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு அளிக்கும். உக்ரைன் அரசாங்கத்திற்கு 800 மில்லியன் டாலர்களை ராணுவ உதவியாக வழங்கப்படும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: Chess Olympiad: 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் குழு அமைப்பு