Ukraine Accusation: எங்கள் மேயரை கடத்திச் சென்றது ரஷ்யா

Russia-kidnaps-mayor-of-Melitopol--Ukraine-accusation

Ukraine Accusation: உக்ரைன் நாட்டின் மெலிடோபோல் நகர மேயர் இவான் ஃபெடோரோவை ரஷ்யப் படைகள் கடத்திச் சென்றதாக உக்ரைன் நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக உக்ரைன் அரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “எதிரியுடன் ஒத்துழைக்க மறுத்த காரணத்தால் 10 ஆக்கிரமிப்பாளர்களை கொண்ட குழு மெலிடோபோல் மேயர் இவான் ஃபெடோரோவை கடத்திச் சென்றது. முற்றுகையிடப்பட்ட நகரின் அவசரகால மையத்தில் உள்ள பிரச்னைகளைக் கையாளும் போது மேயர் கடத்தி செல்லப்பட்டார்”என்று தெரிவித்தது.

இது தொடர்பாக பேசிய உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, “கடத்தப்பட்ட மேயர் உக்ரைனையும், அவரது நகர மக்களையும் துணிச்சலுடன் பாதுகாத்தவர். ரஷ்யாவின் இந்த செயல் வெளிப்படையாக அவர்களின் பலவீனத்தின் அறிகுறியாகும், அவர்கள் ஒரு புதிய கட்ட பயங்கரவாதத்திற்கு நகர்ந்துள்ளனர், அதில் அவர்கள் முறையான உள்ளூர் உக்ரைன் அதிகாரிகளின் பிரதிநிதிகளை அகற்ற முயற்சிக்கின்றனர்,” என்று கூறினார்.

மேலும், “மெலிடோபோல் மேயர் கடத்தப்பட்டது ஒரு குறிப்பிட்ட நபருக்கு எதிரானது, ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரானது, உக்ரைனுக்கு எதிரானதான குற்றம் மட்டுமல்ல, இது ஜனநாயகத்திற்கு எதிரான குற்றம். ரஷ்ய படைகளின் சயல்கள் ஐஎஸ் பயங்கரவாதிகளின் செயல்களைப் போல கருதப்படும்” என்று கூறினார்.

மெலிடோபோலுக்கு வடக்கே 120 கிமீ தொலைவில் உள்ள சபோரிஜியாவின் பிராந்திய கவுன்சிலின் துணைத் தலைவர் கடத்தப்பட்டு பின்னர் சில நாட்களுக்கு முன்பு விடுவிக்கப்பட்டார்.

இதையும் படிங்க: பொய் வழக்கு போட்டு என்னை சிறையில் தள்ளியது திமுக அரசு- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்