இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.3000 உதவித்தொகை

money
ஜெயித்தால் ரூ.10 ஆயிரம் என 10 ரூபாய் டோக்கன் வழக்கிய 4 அதிமுக பெண்கள் மீது வழக்கு

கோவா மாநிலத்தில் அடுத்த மாதம் பிப்ரவரி 14ம் தேதியன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. சட்டப்பேரவை தேர்தலையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர், கோவா மாநிலத்தில் சூறாவளி பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவாவில் சுற்றுப்பயணம் செய்து, ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வரும் அக்கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு மாதம் தோறும் ரூ.3000 உதவித்தொகை வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தார்.

ஆம் ஆத்மியின் முக்கிய தேர்தல் வாக்குறுதியாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறும் போது, டெல்லியைப் போலவே கோவா மாநிலத்திலும் இலவச மொஹல்லா க்ளினிக்குகளும், மருத்துவமனைகளும் திறக்கப்படும் என்றும், வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் 3000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். அதே சமயம், வரும் சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றால், கோவா மக்களுக்கு 24 மணி நேரமும் இலவச மின்சாரமும், தண்ணீரும் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார்