Sachin Tendulkar: பேருந்தில் பயணித்த சச்சின் டெண்டுல்கர்..!

பேருந்தில் பயணித்த சச்சின் டெண்டுல்கர்
பேருந்தில் பயணித்த சச்சின் டெண்டுல்கர்

Sachin Tendulkar: முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தான் பேருந்தில் பயணம் செய்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இந்தியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட் மூலம் இந்தியாவிற்கே பெருமை சேர்த்தவர் ஆவார். மும்பையை சேர்ந்த சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் சர்வதேச அளவில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இவரது சாதனைகள் சிலவற்றை தற்போதைய பேட்ஸ்மேன்களால் கூட முறியடிக்க முடியவில்லை. இந்திய அணிக்காக 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் டெண்டுல்கர் 15 ஆயிரத்து 921 ரன்கள் குவித்துள்ளார். இதேபோல் ஒருநாள் போட்டியில் 463 ஆட்டங்களில் விளையாடி 18 ஆயிரத்து 426 ரன்கள் குவித்துள்ளார்.

இதையும் படிங்க: Rahul Gandhi: ராகுல் காந்திக்கு ரூ.50 லட்சம் சொத்தை எழுதி வைத்த மூதாட்டி

இதேபோல் ஒரே ஒரு சர்வதேச டி20 போட்டியில் விளையாடியுள்ள சச்சின் 10 ரன்கள் எடுத்துள்ளார். ஐ.பி.எல். போட்டியை பொறுத்தவரையில் 78 போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் 2 ஆயிரத்டு 334 ரன்களை குவித்துள்ளார். இதேபோல் பந்துவீச்சிலும் கைத்தேர்ந்தவர் சச்சின். 200 டெஸ்ட் போட்டிகளில் 46 விக்கெட்டுகளையும், 463 ஒருநாள் போட்டிகளில் 154 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர், தான் பேருந்தில் பயணம் செய்த புகைப்படம் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நீல நிற சட்டை மற்றும் ஜீன்ஸ் பேண்டுடன் புகைப்படத்தில் சச்சின் டெண்டுல்கர் காட்சி அளிக்கிறார். அந்த டுவிட்டர் பதிவில், குழந்தை பருவத்திற்கு திரும்பியதை நினைவு கூறுவதாக குறிப்பிட்டுள்ளார். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த சச்சின் டெண்டுல்கர் சிறு வயதில் அரசு பேருந்து மற்றும், புறநகர் ரயில்களில் பயணித்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பின்னர் பேருந்தில் பயணம் செய்த அவர், அந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். டுவிட்டரில் பதிவிடப்பட்டுள்ள இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Sachin Tendulkar revisits childhood memories

இதையும் படிங்க: Sri Lanka crisis: பதவியேற்ற 24 மணி நேரத்தில் புதிய நிதி மந்திரி ராஜினாமா…!