திருவொற்றியூரில் வீடுகள் இடிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று வீடுகள்

boarding house
திருவொற்றியூரில் வீடுகள் இடிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று வீடுகள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

திருவொற்றியூரில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தினால் கட்டப்பட்ட பழைய குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்ததில் 24 வீடுகள் முழுவதுமாக சேதமடைந்து அதனால் மக்கள் பாதிப்படைந்த செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன்.

விபத்து நடந்த பகுதிக்கு உடனடியாக நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட அமைச்சர் தா.மோ.அன்பரசனை அனுப்பி வைத்து, விபத்தில் வீடிழந்த குடும்பத்தினருக்கு உடனடியாக மாற்று குடியிருப்புகள் வழங்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.

பாதிக்கப்பட்ட மக்கள், மீண்டும் புதிய வாழ்க்கையைத் தொடங்க 24 குடும்பங்களுக்கும் தலா ரூபாய் ஒரு லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இதுபோன்ற விபத்து ஏற்படாத வகையில் பழைய குடியிருப்புகளின் விபரங்களைச் சேகரிக்கவும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளேன்.

இவ்வாறு முதலமைச்சர்.மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: Mukesh Ambani: இந்திய கோடீஸ்வரர்களில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம்