ரெம்டெசிவிர் மருந்து விலை குறைப்பு

கொரோனா சிகிச்சைக்கு ரெம்டெசிவிர் மருந்து பயன்படுத்தப்படுகிறது. அந்த மருந்தின் விலையை மருந்து கம்பெனிகள் அதிக விலைக்கு விற்பதாக புகார் எழுந்தது.

இந்தநிலையில், மத்திய அரசின் தலையீட்டை தொடர்ந்து, பல்வேறு மருந்து நிறுவனங்கள், ரெம்டெசிவிரின் விலையை கணிசமாக குறைத்துள்ளன.

இத்தகவலை மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை மந்திரி மன்சுக் எல்.மான்டவியா தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் தெரிவித்துள்ளார். கடிலா ஹெல்த்கேர் நிறுவனம், ரெம்டெசிவிர் மருந்தின் விலையை ரூ.2 ஆயிரத்து 800-ல் இருந்து ரூ.899 ஆக குறைத்துள்ளது. டாக்டர் ரெடீஸ் லேப் நிறுவனம், ரூ.5 ஆயிரத்து 400-ல் இருந்து ரூ.2 ஆயிரத்து 700 ஆக குறைத்துள்ளது. இதுபோல், சிப்லா, மைலன், சைன்ஜின் இன்டர்நேஷனல், ஹீட்டரோ ஹெல்த்கேர் ஆகிய மருந்து நிறுவனங்களும் விலையை குறைத்துள்ளன.