மத்திய அரசின் 2 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்டும் திட்டத்தின் ஒரு பகுதியாக நாட்டின் 2வது பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் ரீடைல் எரிபொருள் விற்பனை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்-ன் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் பங்குகளை விற்பனை செய்து தனியார்மயமாக்கும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளது.
இந்த நிலையில் BPCL பங்குகளைக் கைப்பற்ற விண்ணப்பம் அளிக்கக் கடைசி நாளான நவம்பர் 16ஆம் தேதியன்று பன்னாட்டு நிறுவனங்கள் வராத காரணத்தால் ரிலையன்ஸ் களத்தில் இறங்கும் என அனைத்து தரப்பும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி வரையில் முகேஷ் அம்பானி விருப்பம் தெரிவிக்கவில்லை.



