தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற போது, திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும் என திமுக அறிவித்தது. தற்போது திமுக வெற்றி பெற்று ஆட்சியில் உள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை முதலமைச்சர் ஸ்டாலின் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வரும் நிலையில், குடும்ப தலைவிகளுக்கு 1000 வழங்கும் திட்டம் எப்போது துவங்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி விளக்கமளித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி ‘குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 அளிப்பது பற்றி விரைவில் அறிவிப்பு வெளியாகும்’ என கூறியிருந்தார்.
இந்நிலையில், ரேஷன் கார்டில் குடும்பதலைவியின் பெயர் முதலில் இருந்தால் மட்டுமே அரசு 1000 வழங்கும் என சமூகவலைத்தளங்களில் செய்திகள் வெளியானது. எனவே, இது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. பலரும் ரேஷன்கடைக்கு சென்று இதுபற்றி விசாரித்து வருகின்றனர். ஆனால், அதில் உண்மையில்லை என்பது தெரியவந்துள்ளது. ரேஷன் அட்டையில் புகைப்படத்திற்கு கீழே PHH, PHH-AAY, NPHH, NPHH-S, NPHH-NC என 5 குறியீடுகளில் ஏதேனும் ஒன்று இருக்கும்.
இதில், முதல் மூன்றில் ஏதேனும் ஒன்று அதாவது, PHH, PHH-AAY, NPHH இதில் எந்த குறியீடு இருந்தாலும் அவர்களுக்கு 1000 வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. அதேபோல், ரேஷன் அட்டைகளை குடும்ப தலைவி பெயருக்கு மாற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்



