Corona Vaccine: தடுப்பூசி போட்டால் ஸ்மார்ட்போன் பரிசு..!

Corona Vaccine: தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வோருக்கு 50 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட்போன் பரிசாக வழங்கப்படும் என்று குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலையடுத்து உலக நாடுகளை தற்போது அச்சத்தில் வைத்திருக்கும் பெயர் ஓமிக்ரான். தொடர்ந்து பல திரிபுகளை அடைந்த வைரசுக்கு ஆல்பா டெல்டா என பெயர் வைத்து இருந்த உலக நாடுகள் தற்போது ஓமிக்ரான் என பெயர் வைத்துள்ளனர். தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் தற்போது பல்வேறு நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஏற்கனவே ஆஸ்திரேலியா இஸ்ரேல் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பரவிய இந்த வைரஸ் காரணமாக, இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் குறிப்பிட்ட நாட்கள் தனிமைபடுத்தலுக்கு பிறகு அனுமதிக்கப்பட உள்ளனர்.

மேலும் ஹை ரிஸ்க் பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனை முழுமையாக நடத்தப்பட்டு, முடிவு வரும்வரை அவர்கள் விமான நிலையத்திலேயே தங்க வைக்கப்படுகின்றனர். இருந்தும் தற்போது இந்தியாவிலும் ஓமிக்ரான் பரவி உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், பாதுகாபு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் கடைபிடித்து வருகின்றனர்.

குறிப்பாக அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அரசின் இந்த நடவடிக்கைகளால் உலகிலேயே 100 கோடி தடுப்பூசிகளை செலுத்திய நாடாக இந்தியா உள்ளது. இருந்தபோதும், இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக் கொள்வதில் மக்கள் அலட்சியம் காட்டி வருவதாகக் கூறப்படும் நிலையில், நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமெடுத்து வருகின்றன.

கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி தட்டுப்பாடில்லாமல் கிடைத்து வருவதால் பொதுமக்கள் அனைவருக்கும் இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்த மத்திய மாநில அரசுகள் மும்முரம் காட்டி வருகின்றன. அதில் ஒரு நடவடிக்கையாக, குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகராட்சி ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் 50 ஆயிரம் மதிப்பிலான ஸ்மார்ட்போன் பரிசு என்பதே அந்த அறிவிப்பு ஆகும். இந்த அறிவிப்பு பொதுமக்களை அதிகமாக ஈர்த்துள்ளது எனலாம்.

ராஜ்கோட்டில் டிசம்பர் மாதம் 4ம் தேதியிலிருந்து 10ம் தேதிக்குள்ளான காலகட்டத்தில் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வோருக்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு ஸ்மார்ட்போன் பரிசு வழங்கப்படும் என்று ராஜ்கோட் நகராட்சி ஆணையர் அமித் அரோரா தெரிவித்துள்ளார்.

‘ராஜ்கோட் நகராட்சி சுகாதார மையங்களின் சார்பில் சிறு சிறு குழுக்களாக பிரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. அதன்படி, மேற்குறிப்பிட்ட காலகட்டத்தில் எந்த சுகாதார குழு அதிக எண்ணிக்கையிலான பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்தி சாதனை படைக்கிறார்களோ அவர்களுக்கு ரூபாய் 21 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுபடுத்தும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.’

Weather report: இன்று 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு