நான் தோற்றால் அது மக்களின் தோல்வி- ரஜினிகாந்த்

தமிழக மக்கள் நலனுக்காக என் உயிரே போனாலும் பரவாயில்லை. நான் வென்றால் அது மக்களின் வெற்றி, நான் தோற்றால் அது மக்களின் தோல்வி என்று ரஜினிகாந்த் தனது தேர்தல் பங்களிப்பை உறுதிசெய்து தெளிவுபடுத்தியுள்ளார்.

ஜனவரியில் கட்சித் துவங்கவுள்ளதாகவும், டிசம்பர் 31-இல் தேதி அறிவிப்பு வெளியாகுமென நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், ஜனவரியில் கட்சித் துவக்கம்,டிசம்பர் 31-இல் தேதி அறிவிப்பு. மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம். இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல எனத் தெரிவித்துள்ளார்.