சென்னையிலிருந்து ஹைதராபாத் சென்றார் நடிகர் ரஜினிகாந்த்..!

அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றார் நடிகர் ரஜினிகாந்த்.

டிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் நடைபெற இருக்கும் ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்காக இன்று சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார். தொடர்ந்து அங்கு 3 வாரங்கள் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

பின்னர் சென்னை திரும்பும் ரஜினிகாந்த் மே 3-ம் தேதி டெல்லியில் நடக்க இருக்கும் விருது விழாவில் கலந்து கொள்ள திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன,

‘அண்ணாத்த’  திரைப்படம் 2021-ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4-ம் தேதி வெளியாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.