மும்பையில் அடுத்த 5 நாட்களுக்கு மழை

மும்பையில் அடுத்த 5 நாட்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

இதுதொடர்பாக நகருக்கு அடுத்த 5 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் பலத்த மழை பெய்தாலும் அதை எதிர்கொள்ள மும்பை மாநகராட்சி, நிர்வாகம் முழுவீச்சில் 24 மணி நேரமும் தயாராக இருக்க வேண்டும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.