rain in tamilnadu : தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

rain-in-tamilnadu-heavy-rain-in-7-district
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

rain in tamilnadu : தமிழகத்தில் மார்ச் 9-ஆம் தேதி வரை மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளதால் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடற்கரையை நோக்கி நகரவுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், மேலும் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களாகிய தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்காலில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.rain in tamilnadu

இதையும் படிங்க : Tata IPL 2022 : டாடா ஐபிஎல் 2022 அட்டவணை

மேலும் நாளை தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய 8 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்காலில் மிக கனமழை பெய்யும் எனவும் அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.