அடுத்த 36 மணிநேரத்தில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

heavy-rain-warning-to-tamil-nadu-by-chennai-meteorological-center
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

இந்திய பெருங்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து, இன்னும் 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 அதே போல், டிசம்பர் 03 தேதியன்று தென்கிழக்கு அரபிக்கடல் கேரள கடலோர பகுதி, லத்தச்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்கூறிய பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம். மேலும் ஆழ் கடல் பகுதிக்கு வரும் டிசம்பர் 2 ஆம் தேதி வரை செல்லவேண்டாம்”. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.