Railway: செங்கோட்டை-கொல்லம் ரெயில் 22-ந்தேதி வரை ரத்து

Railways
பயோ டீசலில் டீசல் லோகோக்களை இயக்க ரயில்வே முடிவு

Railway: புனலூர் – கொல்லம் ரெயில் பாதை பிரிவில் மின்மயமாக்கல் பணிகளை விரைவுபடுத்துவதற்காக செங்கோட்டை- கொல்லம் -செங்கோட்டை (06659/06660) விரைவு சிறப்பு ரெயில்கள் பிப்ரவரி 24 முதல் மார்ச் 15-ந்தேதி வரை முழுமை யாக ரத்து செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

மின்மயமாக்கல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இந்த ரெயில்கள் மேலும் 5 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது.

அதன்படி செங்கோட்டை -கொல்லம் சிறப்பு ரெயில் (06659) மார்ச் 21-ந்தேதி வரையும், கொல்லம்- செங்கோட்டை சிறப்பு ரெயில் (06660) மார்ச் 22-ந்தேதி வரையும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

நெல்லை- பாலக்காடு, நெல்லை-பாலருவி மற்றும் சென்னை-கொல்லம், சென்னை-கொல்லம் மெயில் ரெயில்கள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Xiaomi 12 series launch : Xiaomi 12X, 12 மற்றும் 12 Pro அறிமுகம்