public exam fee : பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு தேர்வு கட்டணத்தில் விலக்கு !

வினாத்தாள் கசிந்த விவகாரம்- திருவண்ணாமலை மாவட்ட கல்வி அதிகாரி சஸ்பெண்டு

public exam fee : கொரோனா தொற்றின் 2 ம் அலை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன.ஒரு வருட காலத்திற்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டன.மேலும் மாணவர்களின் நலன் கருதி பள்ளி வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டன.

மேலும் மேலும் பள்ளிகளை திறக்க அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்யலாம் என்று ஒன்றிய அரசு உத்தரவிட்டது.இதனை தொடர்ந்து தமிழகத்தில் செப்.,1ம் தேதி 9 முதல் பிளஸ் 2 வரை பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்தது.

இந்நிலையில்,10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் நேரடியாக பொதுத்தேர்வு எழுத வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து உள்ளார்.public exam fee

இந்நிலையில்,அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் தேர்வு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்முறை கொண்ட தேர்வுகளுக்கு 225 ரூபாயும் செய்முறை அல்லாத பாடங்களுக்கு 175 ரூபாயும் கட்டணமாக வசூலிக்க வேண்டும்.நாளை முதல் 20ம் தேதி வரை தேர்வு கட்டணத்தை மாணவர்கள் செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க :Gold and silver rate : இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் !