தமிழகத்தில் தனியார் ரயில் சேவை..!

Train accident
ஆந்திரா ஸ்ரீகாகுளத்தில் ரயில் விபத்து

தமிழகத்தில் தனியார் ரயில் போக்குவரத்து சேவையை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது இதனை தொடர்ந்து தனியார் ரயில் சேவைக்காக 10 பெரும் நிறுவனங்கள் விண்ணப்பம் செய்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் கொரோனா நோய்பரவல் காரணமாக ரயில் போக்குவரத்து கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது. சுமார் ஒரு ஆண்டு காலமாக முழுமையான பயணிகள் ரயில் சேவை இயங்கலாம் சிறப்பு ரயில்கள் மட்டுமே தமிழகத்தில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள சில வழித்தடங்களில் ரயில் போக்குவரத்து சேவையை தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டது. கொரோனா நோய்பரவல் காரணமாக இந்த திட்டம் தள்ளிப்போன நிலையில் தற்போது அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்காக தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்த புள்ளிகளும் கோரப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது 10 பெரும் தனியார் நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. ஒப்பந்த புள்ளிகளை இந்த மாத இறுதியில் திறக்க ரயில்வே திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் தாம்பரம் பகுதி முழுமையான தனியார் ரயில் சேவை மையமாக மாற்றப்படும் என்று கூறப்படுகிறது. காரணம் சென்னை பகுதியை மையமாக வைத்து 11 தனியார் ரயில் சேவையை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.