பெண்களின் திருமண வயதை உயர்த்தியது ஏன்?

marriage age
பெண்களின் திருமண வயதை உயர்த்தியது

பெண்களின் திருமண வயதை 18 வயதிலிருந்து 21 என உயர்த்தியது ஏன் என்ற காரணத்தை பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். காணொளி மூலமாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை (MSME) மூலமாக புதுச்சேரியில் நிறுவப்பட்டுள்ள தொழில்நுட்ப மையம் மற்றும் காமராஜர் மணிமண்டபத்தை திறந்து வைத்து பேசிய போது பிரதமர் மோடி இதனை தெரிவித்துள்ளார்.

“மகன்களும், மகள்களும் சமம் என நாங்கள் நம்புகிறோம். பெண்களின் திருமண வயதை 18 வயதிலிருந்து 21 என உயர்த்துவதன் மூலமாக பாரத தேசத்தின் மகள்கள் தங்களின் கெரியரை அவர்களே அமைத்துக் கொள்ள முடியும். அதன் மூலம் அவர்கள் சுய சார்பாகவும் இருக்க முடியும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து “நம் இளைஞர்கள் தங்கள் கனவுகளை எந்தவித தடைகளும், அச்சங்களும் இல்லாமல் தொடர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். முத்ரா யோஜனா, ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா, ஸ்கில் இந்தியா, அடல் (Atal) இன்னோவேஷன் மிஷன் மற்றும் NEP மாதிரியான அரசு திட்டங்கள் அவர்களின் கனவுகளுக்கு உதவுகின்றன.

நம் நாட்டின் இளைஞர்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. நாம் கனவில் கூட நினைத்து பார்த்திடாத உயரத்திற்கு அவர்கள் நம்மை அழைத்துச் செல்வார்கள் என்று நான் நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.

இதையும் படிங்க: Pongal Holiday: கேரளாவில் நாளை பொங்கல் விடுமுறை