Sri Lanka crisis: இலங்கை பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார் அதிபர் கோத்தபய ராஜபக்சே

அதிபர் கோத்தபய ராஜபக்சே
அதிபர் கோத்தபய ராஜபக்சே

Sri Lanka crisis: இலங்கையில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இங்கு உணவுப்பொருட்கள், எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அவற்றின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. மேலும் அங்கு அரசியல் நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு இடையே, இலங்கையில் பாராளுமன்ற கூட்டமும் நடைபெற்று வருகிறது. பொருளாதார நெருக்கடி தொடர்பாக 3வது நாளாக விவாதம் நடைபெற்று வரும் நிலையில் இலங்கை பாராளுமன்றத்திற்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்று வருகை தந்துள்ளார்.

பாராளுமன்றத்தில் அதிபர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்று பாராளுமன்ற விவாதத்தை கவனித்து வருகிறார் இலங்கை பாராளுமன்ற விதிகளின்படி அதிபர் பாராளுமன்றத்துக்கு வரவேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. இருப்பினும், கோத்தபய ராஜபக்சே பாராளுமன்றம் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Sri Lanka Crisis: இலங்கைக்கு 2,70,000 மெட்ரிக் டன் பெட்ரோல், டீசலை வழங்கியது இந்தியா