பிரபாஸ் நடிப்பில் ராதே ஷியாம் படத்தின் டீஸர் வெளியீடு !

பிரபாஸ், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ராதே ஷியாம்.இந்த படத்தை ‘சாஹோ’ படத்தைத் தயாரித்த யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனம்தான் இந்தப் படத்தையும் தயாரித்து வருகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ‘ராதே ஷ்யாம்’ திரைப்படம் வெளியாக உள்ளது.இது காதல் படம் என்பதால் காதலர் தினமான இன்று இந்தப்படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது.

மேலும் படம் ஜூலை 30ம் தேதி படம் வெளியாகும் என்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வெளியான சிலமணி நேரங்களிலேயே சமூகவலை தளங்களில் அதிகமாக லைக் அண்ட் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.