tn news : தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.இதன் பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.தற்போது இந்த மூன்றாம் அலையில் பரவலை தடுக்க வார இறுதி நாளான ஞாயிற்று கிழமையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
இந்த மூன்றாம் அலையில் ஏராளமான தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகிவருகின்றனர்.தமிழகத்தில் நேற்று 26,533 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,20,974 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். கொரோனா உறுதியானதை தொடர்ந்து இல்லத்தில் தனிமைப்படுத்தி கொண்டார் வைகோ. இதைத் தொடர்ந்து வீட்டிலேயே தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார்.



