தேனியைச் சேர்ந்தவர் அன்னை இந்திரா. இவர் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக வேலை செய்துவந்தார். இந்திராவின் கணவர் பொன்ராஜ்.
இந்திரா-பொன்ராஜ் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தனது குழந்தைகளுடன் இந்திரா திண்டுக்கல் பைபாஸ் சாலையில் உள்ள, டிரஸ்சரி காலனி பகுதியில், தனது 12 வயது மகன் சுதர்சன், 8 வயது மகள் மெர்சி ஆகியோருடன் வாடகை வீட்டில் கடந்த 3 ஆண்டுகளாகக் குடியிருந்துவந்தார்.
கணவரைப் பிரிந்து வாழ்ந்துவந்த பெண் காவலர் இந்திராவிற்கு சர்ச் பாதிரியார் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவரும் அடிக்கடி இந்திராவின் வீட்டிற்கு வந்துசென்றுள்ளார். மேலும், உடல்நலம் பாதித்த இந்திராவை, மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்காமல், வீட்டில் வைத்து குணமடைவதற்குப் பிரார்த்தனை செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்திரா வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசவே, அருகிலிருந்தோர் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த டவுன் டி.எஸ்.பி மணிமாறன் தலைமையிலான போலீஸார், இந்திராணி வீட்டில் சோதனை செய்ததில், ஒரு அறையில் இந்திராவின் அழுகிய உடல் துணியால் சுற்றப்பட்டுக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
அதிர்ச்சி தரும் இந்தச் சம்பவம் குறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இறந்த தாயின் உடலுடன் அவரது இரு குழந்தைகளும் 22 நாட்களாக வீட்டில் இருந்த சம்பவம், திண்டுக்கல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த காவலர் இந்திரா, கடந்த சில வருடங்களுக்கு முன்புதான் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு அந்தப் பாதிரியாரின் மூலம் மதமாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேனியைச் சேர்ந்தவர் அன்னை இந்திரா. இவர் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக வேலை செய்துவந்தார். இந்திராவின் கணவர் பொன்ராஜ். இந்திரா-பொன்ராஜ் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தனது குழந்தைகளுடன் இந்திரா திண்டுக்கல் பைபாஸ் சாலையில் உள்ள, டிரஸ்சரி காலனி பகுதியில், தனது 12 வயது மகன் சுதர்சன், 8 வயது மகள் மெர்சி ஆகியோருடன் வாடகை வீட்டில் கடந்த 3 ஆண்டுகளாகக் குடியிருந்துவந்தார்.