3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற பிரதமர் மோடி முடிவு !

Lockdown in tamilnadu : தமிழகத்தில் நாளை முதல் இரவு ஊரடங்கு
தமிழகத்தில் நாளை முதல் இரவு ஊரடங்கு

செப்டம்பர் 2020 இல் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று சட்டங்கள், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நேரடியாக விற்க அனுமதித்தன.

இந்தியாவின் விவசாய சந்தைகளை தாராளமயமாக்க கடந்த ஆண்டு 3 வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன.இதனை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர்.தற்போது பிரதமர் மோடி 3 வேளாண் சட்டங்களை திரும்ப போவதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியுள்ளது,சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான அரசியலமைப்பு செயல்முறை ஒரு மாதத்திற்குள் முடிக்கப்படும்.விவசாயிகள், குறிப்பாக சிறு விவசாயிகளின் நலனுக்காக எங்கள் அரசு உறுதிபூண்டுள்ளது. அவர்களுக்கு முழுமையாக சேவை செய்ய நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். நல்ல நோக்கத்துடன் விவசாயச் சட்டங்களைக் கொண்டு வந்துள்ளோம், என்று அவர் கூறினார்.

ஆனால், அவர்களை சமாதானப்படுத்த முடியவில்லை என்பது வருத்தம் அளிப்பதாகவும் எனவே மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுகிறோம் எனவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.