பிரதமர் மோடியின் பொங்கல் வாழ்த்துக்கள் !

பிரதமர் மோடியின் பொங்கல் வாழ்த்துக்கள்
பிரதமர் மோடியின் பொங்கல் வாழ்த்துக்கள்

இன்று நாடு முழுவதும் பல்வேறு பண்டிகைகள் கொண்டாடப்படுவதையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளதோடு, பல்வேறு பண்டிகைகள் இந்தியாவின் துடிப்பான கலாச்சார பன்முகத்தன்மையை குறிக்கிறது என்று கூறியுள்ளார்.

இந்தியாவின் துடிப்பான கலாச்சார பன்முகத்தன்மையைக் குறிக்கும் பல்வேறு பண்டிகைகளை இந்தியா முழுவதும் நாங்கள் கொண்டாடுகிறோம். இந்த பண்டிகைகளுக்கு எனது வாழ்த்துக்கள் என்று பிரதமர் ட்வீட் செய்துள்ளார்.

மகர சங்கராந்தி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்ட பிரதமர் மோடி, உங்கள் அனைவருக்கும் மகர சங்கராந்தி நல்வாழ்த்துக்கள். இயற்கை வழிபாட்டுடன் தொடர்புடைய இந்த பண்டிகை அனைவரின் வாழ்விலும் நல்ல ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் தரட்டும் என்று கூறியுள்ளார்.