Lata Mangeshkar: லதா மங்கேஷ்கருக்கு இறுதி அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி மும்பை பயணம்

lata mangeshkar and modi
லதா மங்கேஷ்கருக்கு இறுதி அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி மும்பை பயணம்

Lata Mangeshkar: கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் பாடகர் லதா மங்கேஷ்கர் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 92.

சுமார் 20 நாட்களுக்கும் மேலாக கொரோனா தொற்றுக்காக மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு இன்று காலை அடுத்தடுத்த பல உறுப்புகளும் செயலிழக்க 8.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.

லதா மங்கேஷ்கரின் உடல் இன்று மாலை முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசியக் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்கவிட்டு இரண்டு நாட்களுக்கு துக்கம் அனுசரிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

மும்பையில் உள்ள லதா மங்கேஷ்கரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திரையுலக பிரபலங்கள், விளையாட்டு நட்சத்திரங்கள் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பிரதமர் மோடியும் நேரில் வந்து அஞ்சலி செலுத்துவதற்காக இன்று மாலை மும்பை வருகிறார். இந்த தகவலை தனது டுவிட்டரில் பிரதமர் பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடி வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் அவருக்கு பல்வேறு பிரபலங்கள், தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் கூறும்போது,

“ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்தது.

லதா மங்கேஷ்கரின் மனதை தொடும் குரல் மற்றும் தேசப்பற்றை வலியுறுத்தும் பாடல்கள், அவருடைய கஷ்டங்கள் நிறைந்த வாழ்க்கை வருங்கால தலைமுறைக்கு உத்வேகமாக இருக்கும்.

அவருடைய கடைசி யாத்திரைக்கு வணக்கத்தை உரித்தாக்குகிறேன்; இதயம் கனிந்த இரங்கல்கள்.”

இவ்வாறு தெரிவித்துள்ளார்

“She Was A Blessing To Humanity”: PM To Attend Lata Mangeshkar’s Funeral

இதையும் படிங்க: Lata Mangeshkar (1929-2022): லதா மங்கேஷ்கரின் வாழ்க்கை பயணம்…!