இந்தியாவின் 75வது சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடியின் உரை !

இந்தியாவின் 75 வது சுதந்திர தின விழாவை இன்று கொண்டாடப்படுகிறது.டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடி ஏற்றினர்.பின்னர் உரையாற்றிய மோடி, நாட்டின் விடுதலைக்காக போராடிய அனைத்து விடுதலை போராட்ட வீரர்களையும் நாம் நினைவுக் கூரவேண்டும்.

நம் நாட்டின் தேசிய உள்கட்டமைப்பு மாஸ்டர் பிளானான ‘பிஎம் கதி சக்தி தேசிய மாஸ்டர் பிளான்’ விரைவில் தொடங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

மேலும் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு 8 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள மொபைல் போன்களை இந்தியா இறக்குமதி செய்தது, இப்போது 3 பில்லியன் டாலர் மதிப்புள்ள மொபைல் போன்களை ஏற்றுமதி செய்கிறது என்று பிரதமர் கூறினார்

மேலும் இந்தியாவில் கிராமங்களின் நிறைய மாற்றத்தை காணமுடிகிறது என்று மோடி கூறினார், டிஜிட்டல் தொழில்முனைவோர் கிராமங்களிலும் வளர்க்கப்படுகிறார்கள்.

இந்த கொரோனா காலம் மிக பெரிய சவாலாக உள்ளது. இந்திய மக்கள் கட்டுப்பாடு மற்றும் பொறுமையுடன் கொரோனாவுக்கு எதிரான போரை நடத்தியுள்ளனர்.

ஒலிம்பிக்ஸில் பங்கேற்ற வீரர்கள், வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். கொரோனா காலத்தில் பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், தடுப்பூசி கண்டுபிடித்தவர்கள் என அனைவருக்கும் எனது வணக்கங்கள் என்று பேசினார்.