ஆஸ்திரேலியா, ஜப்பான் பிரதமர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு..!

குவாட் கூட்டமைப்பின் உச்சிமாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, ஆஸ்திரேலியாவின் பிரதமர் ஸ்காட் மோரிசன், ஜப்பான் பிரதமர் சுஹா ஆகியோரை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து விவாதித்தார்.

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான பொருளாதாரம் மற்றும் ராணுவ உறவுகளை வலுப்படுத்துவது பற்றி இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டது. இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், குவாட் உச்சி மாநாடு, இந்தோ – பசிபிக் பிராந்திய உறவுகள், ஆப்கானிஸ்தான் விவகாரம் ஆகியவை குறித்து இரு தலைவர்களும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜப்பான் பிரதமர் யோஷிஹைடே சுஹாவையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்தோ-பசிபிக் பிராந்திய வளர்ச்சி, டிஜிட்டல் பொருளாதாரம் உள்ளிட்டவை குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்ததாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: இன்றைய ராசி பலன்