Central Armed Police Forces: மத்திய  படைகளுக்கு ரூ.1,523 கோடி ஒதுக்கீடு

modi-govt-approves-modernisation-plan-iv-for-central-armed-police-forces-with-a-financial-outlay-of-rs-1523-crore
: மத்திய  படை

Central Armed Police Forces: சி.ஏ.பி.எப்., படைகளின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், ஆயுதங்கள் கொள்முதல் செய்யவும், 1,523 கோடி ரூபாயை, மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.

சி.ஏ.பி.எப்., எனப்படும், மத்திய ஆயுத காவல் படையில், எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, மத்திய தொழில் பாதுகாப்புப் படை, இந்தோ – திபெத்திய எல்லை காவல்படை, தேசிய பாதுகாப்புப் படை உள்ளிட்ட பல பிரிவுகள் உள்ளன.

இந்தப் படையின் வீரர்கள் தான் ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளிலும், பாகிஸ்தான், வங்கதேசம், சீனா, மியான்மர், நேபாளம், பூட்டான் ஆகிய நம் அண்டை நாடுகளின் எல்லைப் பகுதிகளில், பாதுகாப்பு பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, சி.ஏ.பி.எப்., படைகளின் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், படைப் பிரிவுகளுக்கு தேவையான ஆயுதங்களை கொள்முதல் செய்யவும், 1,523 கோடி ரூபாயை, மத்திய அரசு நேற்று ஒதுக்கியது.’மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வழிகாட்டுதலின்படி ஒதுக்கப்பட்டுள்ள இந்த நிதி வாயிலாக, சி.ஏ.பி.எப்., படைகளின் ஒட்டுமொத்த செயல்திறனும் மேம்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Govt approves Rs 1,523 cr for procuring weapons, upgrading IT infra of CAPFs

இதையும் படிங்க: HBD selvaraghavan : இயக்குனர் செல்வராகவன் பிறந்தநாள் இன்று