பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாக இவற்றின் விலையில் எந்த மாற்றமுமின்றி விற்பன செய்யப்பட்டு வருகிறது. இதன்படி, லிட்டர் ஒன்றுக்கு பெட்ரோல் விலை ரூ.84.14க்கும், டீசல் ரூ.75.95க்கும் நேற்று விற்பனையானது.

இந்நிலையில், 11வது நாளாக விலையில் மாற்றமின்றி லிட்டர் ஒன்றுக்கு பெட்ரோல் ரூ.84.14க்கும், டீசல் ரூ.75.95க்கும் இன்று விற்பனையாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.