இன்றைய பெட்ரோல் விலை

பெட்ரோல் விலை  லிட்டருக்கு 18 காசுகள் குறைந்து, 92.77 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல் டீசல் விலையும் நேற்றைய விலையிலிருந்து 19 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.86.10 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர்ந்து வந்த நிலையில் கடந்த 24 நாள்களாக மாற்றமில்லாமல் இருந்தது. இந்நிலையில் நேற்றும், இன்றும் விலை குறைந்திருப்பது வாகன ஓட்டிகளை நிம்மதி பெருமூச்சு விடச் செய்துள்ளது.

இந்த விலை குறைப்பு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.